புதிய களனி பாலத்தின் இருபக்கமும் உகந்த மரங்களை நட ஆலோசனை!

Date:

இலங்கையின் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத் திட்டத்தின் களனி திஸ்ஸ சுற்று வட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளையும், புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின் இருபக்கத்தையும் அழகுபடுத்துவதற்காக தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளின் பரிந்துரைப்படி உகந்த தாவர இனங்களை நடுமாறு ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகள் நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம், அலரி, மகுல் கரட, ஆல மரம் மற்றும் முருத்த ஆகியவற்றை நடுவதற்கு முன்மொழிந்துள்ளனர்.

இவ்வாறு நடும் மரங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பை உருவாக்ககுமாறு திட்டப் பணிப்பாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். செப்டம்பர் இறுதிக்குள் பொதுமக்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய களனி பாலம் திட்டத்தின் நிலப்பகுதியை அழகுபடுத்துவது தொடர்பில் Zoom தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இந்த கூட்டம் இன்று (2021-08-29) ஆம் திகதி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர்.பிரேமசிரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சமிந்த அதலுவகே, திட்டப் பணிப்பாளர் தர்சிக்கா ஜயசேகர உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...