மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளில் யார் யாருக்குக்கு பயணிக்க அனுமதி

Date:

மக்களின் அத்தியாவசிய சேவைகளை உரிய வகையில் முன்னெடுக்கும் நோக்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் இடம்பெற்று வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். இதன்படி, ரயில் மற்றும் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய சேவைக்கு செல்லும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னரே ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு ஏற்ப, மாகாணங்களுக்கு இடையிலும், மாகாணங்களுக்குள்ளும் ரயில் சேவைகள் காலை மற்றும் மாலை வேளைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார்.

அத்தியாவசிய சேவைகளை இலக்காக கொண்டு, 40 வீதமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் கடமையாற்றும் சுமார் 300 பேர், கொவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதனால், ஊழியர்களை வெவ்வேறாக அழைத்து, சேவைகளில் ஈடுபடுத்தி வருவதாகவும் கிங்ஸிலி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...