மாஹோ மஸ்ஜித் ஆயிஷா ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

Date:

(அதீக் அமீனுத்தீன்- மாஹோ.)

கடந்த  26 ம் திகதி காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை மாஹோ மஸ்ஜித் ஆயிஷா நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில், MIM நிறுவனத்தின் அனுசரணையில் மாஹோவையும் அதனோடு இணைந்த அடுத்த ஊர்களான மடபொக்குன, அடவரல,ரந்தெனிகம,உள்ளலபொல ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்களினதும் பங்கேற்பில் இரத்த தானம் நிகழ்வொன்று மாஹோ மஸ்ஜித் ஆயிஷா ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 98 பேர் இரத்ததானம் வழங்கினர்.நிகழ்வில் கலந்து கொண்டு , இரத்த தானம் வழங்கிய அனைவரும் நாட்டின் சுகாதார பிரிவிற்கு தங்களால் முடியுமான முறையில் பங்களித்ததை இட்டு பூரண திருப்தியுடன் விடை பெற்று சென்றதாக ஊடகவியலாளர் அதீக் தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதாரப் பிரிவினர் நாட்டின் இவ் இக் கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து சிறப்பான முறையில் நிகழ்வை நடாத்தி முடித்துக் கொடுத்தமைக்கு மஸ்ஜித் நிர்வாகத்தினருக்கும் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கு பங்களித்ததோடு, ஆதரவாக இருந்த சுகாதாரப் பிரிவினருக்கும், மாஹோ  பொது சுகாதார பரிசோதகர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட இரத்ததான நிகழ்வை பரிபூரணமான முறையில் நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பாகவும் , ஆதரவாகவும் இருந்த நல்லுள்ளங்கள் மற்றும் அனைத்து ஊர் மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக மாஹோ மஸ்ஜித் ஆயிஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...