ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இலங்கையர்களும் சுற்றுலா விசாவுக்காக விண்ணப்பிக்க முடியும்.
அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெற்றிருக்க வேண்டும்.
உலக சுகாதார அமைப்பால் இதுவரை AstraZeneca/Covishield, Moderna, Pfizer, Johnson & Johnson, Sinopharm, Sinovac ஆகிய கொவிட் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் தமது நாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்ட நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் வைத்து கட்டாய Rapid Antigen சோதனையை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது