முன்னால் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவையொட்டி எதிர் கட்சித் தலைவரின் அனுதாபச் செய்தி

Date:

இலங்கை அரசியலில் உருவான முற்போக்கு அரசியல்வாதி என குறிப்பிடக்கூடிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவு குறித்த செய்தி எங்களை அதிர்ச்சியிலும் கடுமையான சோகத்துக்கும் உள்ளாக்கியது.

மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட தனது அரசியல் பயணத்தின் போது தான் நம்புகின்ற கோட்பாட்டுக்கு அமைவாக எவ்வாறான தடைகளுக்கு மத்தியிலும் எதிர் நீச்சல் போடும் அரிதான அரசியல்வாதி மங்கள சமரவீர அவர்கள் எமது இதயங்களில் அழிக்க முடியாத ஒரு சரிதையாவார். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக மட்டுமன்றி மனங்கவர்ந்த நண்பராகவும் அவர் பற்றிய மறக்க முடியாத பல நினைவுகள் உள்ளன.

எப்பொழுதும் இனவாதத்துக்கு எதிராக கொள்கை ரீதியாக செயற்பட்ட அவர் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் தொடர்ச்சியாக முன்நின்ற ஒருவராவார்.

கடந்த ஆட்சியின் போது அன்னாருக்கும் எங்களுக்கும் இடையேயான நட்பு மிகவும் மேம்பட்டிருந்ததுடன் அன்னார் நிதி அமைச்சராக செயற்பட்ட காலத்தின் போது எனது அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு அளப்பரிய ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்கினார். எனது அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பில் ஆழமான அறிவு மற்றும் பாரிய நோக்கு அன்னாரிடம் காணப்பட்டது.

2019 சனாதிபதி தேர்தலின் போது கட்சியின் அபேட்சகராக என்னை முன் நிறுத்துவதற்கான போராட்டத்தின் முன்னோடிகளில் மங்கள சமரவீர அவர்கள் முதன்மையானவர். அதற்கான அன்னாரின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் வாழ்நாளில் எங்களால் மறக்க முடியாது. அன்னார் ஆட்களை இணைத்துக் கொண்ட அரசியலிலும் பார்க்க கொள்கை ரீதியான அரசியல்வாதியாகக் காணப்பட்டார். அதற்காக அவர் போராட்டங்களில் ஈடுபட்டார். அதற்காக அவர் முன்நின்றார்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்ற இரண்டு தூண்களின் மீது தாபிக்கப்பட்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தூர நோக்குடன் அவர் செயற்பட்டார். நிதி அமைச்சராக செயற்பட்ட காலப் பகுதியில் அது தொடர்பில் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. சர்வதேச ரீதியில் அவருக்கிருந்த அதிக தொடர்புகள் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் அத் தொடர்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்ட ஒருவருமாவார்.

சம்பிரதாய அரசியல்வாதியாக இல்லாமல் தனது அரசியல் நடவடிக்கைகளின் போதுகூட நவீனத்துவத்தை மட்டுமன்றி புதிய சம்பிரதாயங்களையும் அதில் இணைத்துக் கொண்டார். பொது பெரமுன அரசாங்கத்தின் கீழ் டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைத்து அதற்கு புதுவடிவை வழங்கியதுடன் அப்போது நகர அபிவிருத்தி தொடர்பில் பயமின்ற பல முடிவுகளை எடுத்தவருமாவார்.

தான் அமைச்சராக கடமை புரியும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த எல்லா அமைச்சுகளுக்கும் விசேட அம்சங்களை நிலை நிறுத்துவதற்கு அவருக்கு முடியுமாயின. தான் நம்புகின்ற கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியாக, பயமின்றி புரட்சிகர முடிவுகளை எடுத்த மங்கள சமரவீர அவர்கள் அவ்வாறான அனைத்துத் தீர்மானங்களின் ஊடாகவும் அவர் நல்லிணக்கத்தைக் கொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கு தனது பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றிய ஒருவராவார்.

மூன்று தசாப்ப கால இலங்கை அரசியலில் மங்களவின் வகிபாகம் அன்னாரது முன்போக்கு மற்றும் புரட்சிகர அம்சங்களைக் கருத்தில் கொண்டு பேசப்பட வேண்டியதொன்றாகும். சர்வதேச மட்டத்தில் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இந்நாட்டுக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மங்கள சமரவீர மறைந்துள்ளார். அன்னாரின் மறைவினால் கவலையடைந்திருக்கும் மங்கள சமரவீர அவர்களின் அனைத்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் துக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அழகான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர நண்பரே உங்களுக்கு உன்னதமாக பரிநிர்வாணம் கிட்ட பிரார்த்திக்கின்றேன்.

சஜித் பிரேமதாச
இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும்
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்

Popular

More like this
Related

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...