மேலும் 728,000 எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 14 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளின் எஞ்சிய தொகையே இவ்வாறு சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசிகள் கேகாலை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.