முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள நிலையிலேயே அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் தமது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக விசேட அனுமதியில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சென்றிருந்தார்.