ரயில்வே கட்டுப்பாட்டு நிலையத்தின் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் பல பிரிவுகளிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலும், திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரயில்களில் பயணிகளின் நெருக்கடியை குறைப்பதற்காக நாளை (09) முதல் விசேட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.