ரிஷாட் பதியூதீனின் மைத்துனருக்கு பிணை

Date:

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துநர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு − கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, இவ்வாறு பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய ஹிஷாலினியின் மரணத்தை அடுத்து, ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், 2016ம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் ஒன்று தொடர்பில் அன்றைய தினமே, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...