வரலாற்றில் புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை!

Date:

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (26) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.அதாவது, அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது.இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,920.71 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

முன்னதாக 2021 ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த நிலையில் இதன்போது 8,812.01 புள்ளிகளாக அனைத்து பங்கு விலைச்சுட்டெண் பதிவாகி இருந்தது.

அதன்படி, இன்றைய தினம் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 164.08 புள்ளிகள் அல்லது 1.87% ஆல் அதிகரித்துள்ளது.இன்றைய மொத்த புரள்வு ரூ. 10.49 பில்லியனாக பதிவாகி உள்ளது.

 

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...