வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரண கொடுப்பனவு!

Date:

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 2,000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக நாடு முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தலா 5 ஆயிரம் ரூபாவை மாதாந்த நிவாரணக் கொடுப்பனவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது 2, 000 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எம்.எம்.சித்ரானந்தவினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...