வீடு ஒன்றில் இருந்து ஒருவருக்கு மாத்திரமே வௌியில் செல்ல முடியும் | இராணுவத் தளபதி

Date:

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இன்றைய தினம் வீடு ஒன்றில் இருந்து ஒருவருக்கு மாத்திரமே வௌியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தொழிலுக்கு செல்பவர்கள் வழமைப் போல செல்ல முடியும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய,

* வணிக வளாகங்களுக்கு அதன் மொத்த வாடிக்கையாளர் திறனில் 25 சதவீதத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

* பல்பொருள் அங்காடியினுள் ஒரே நேரத்தில் அதன் மொத்த திறனில் 25 சதவீதத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* பகல்நேர பராமரிப்பு மையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

* உடல் கட்டமைப்பு மையங்கள் மற்றும் உட்புற விளையாட்டரங்குகள் மூடப்படும்.

* சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் கடற்கரைகளில் ஒன்று கூடுதல் தடைசெய்யப்படும்.

* நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் மூடப்படுகின்றன.

* ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை விடுதிகள் அவற்றின் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே திறந்திருக்க முடியும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...