2020 டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு: அமெரிக்கா முதலிடம்!

Date:

‘டோக்கியோ ஒலிம்பிக் 2020′ இன்று (08)மாலையுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி பெறுபேறுகளுக்கு அமைய அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது.

 

அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று மொத்தமாக 113 பதக்கங்களை பெற்றுக்கொண்டது.

 

இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 88 பதக்கங்களை பெற்றது.டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020’ போட்டிகளை நடத்திய ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 58 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

இந்த நிலையில் 22 தங்கம் உட்பட மொத்தமாக 65 பதக்கங்களை பெற்று பெரிய பிரித்தானியா நான்காவது இடத்திலும் 20 தங்கம் உட்பட மொத்தமாக 70 பதக்கங்களை பெற்று ரஷ்ய ஒலிம்பிக் குழு ஐந்தாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...