26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணம்!

Date:

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு வீடுகளிலிருந்து சிகிச்சை வழங்கும் கொவிட் ஒன்றிணைந்த மனைசார் சேவையின் கீழ் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பதிவு செய்து நோயாளிகள் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் அயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் 2222 கொவிட் நோயாளர்கள் குணமடைந்து ​நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதன்படி, நாட்டில் குணமடைந்த மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டு மக்களில் ஒரு கோடி 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர். ஐம்பத்தி ஆறு லட்சத்து 64 ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...