500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு!

Date:

கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன், இரண்டு  இயந்திர படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் இப்பந்தீவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி இயந்திரப் படகு ஒன்றை கடற்படையினர் பரிசோதனை செய்தனர். இதன்போது அந்த படகில் 15 உரமூடைகளில் மறைத்து வைக்கப்பட்ட 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி இயந்திரப் படகு என்பன உரிய சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த வாரம் மட்டும் 1520 கிலா கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ம் திகதி கற்பிட்டி கிளித்தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 19ம் திகதி இப்பந்தீவு பகுதியில் 650 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரணிலின் உடல் நிலை அறிக்கை;தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு...

செப். 5 வெள்ளிக்கிழமை காசாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

செப்டம்பர் 5, ஆம் திகதிய வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை துஆவுக்காக அர்ப்பணிக்குமாறு சர்வதேச...

‘கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்’: விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதில்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அது இலங்கைக்குச் சொந்தமான தீவு என்றும்...

டிஜிட்டல் அடையாள அட்டை புரிந்துணர்வு ஒப்பந்தம்:அநுர – ஹரிணி உள்ளிட்டஅமைச்சரவைக்கு உயர் நீதிமன்றம் விசேட அறிக்கை

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை...