Breaking News:அமைச்சரவையில் மாற்றம்: சுகாதாரம், கல்வியமைச்சு பொறுப்புகளும் கைமாறின!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜிபக்ஷவினால் இன்று அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, கல்வி அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும்,

சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ரா வன்னியாரச்சி, போக்குவரத்து அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராகவும், டளஸ் அலகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுகளுக்கு மேலதிகமாக, அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 அமைச்சர்களும் சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...