JUST IN:புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டது!

Date:

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய, அத்தியாவசிய தேவைக்காக இன்று (18) முதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அனைத்து உடற்பிடிப்பு மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உள்ளக விளையாட்டரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரை களியாட்ட நிகழ்வுகள் என்பனவும் நடத்தப்படக்கூடாது என புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அறநெறி பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதனை நிறுத்துமாறும் புதிய சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடத்த முடியாது எனவும் சுகாதார வழிகாட்டியில் குறிப்பிட்டுக்காட்டப்பட்டுள்ளது.இதே நேரம், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...