O/L பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை | கல்வி அமைச்சர்

Date:

சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை
2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2020 சாதாரண தரப்பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தார்கள். இதில் 1 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் நுண்கலை சார்ந்த பாடங்களைத் தெரிவு செய்திருந்தார்கள். தற்சமயம் நிலவும் கொவிட் வைரஸ் பரவலினால் நுண்கலை சார்ந்த பாடங்களை தெரிவு செய்த பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

செய்முறைப் பரீட்சையை நடத்தி பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்திருந்தாலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...