ஆறு வருடங்களின் பின்னர் ஶ்ரீலங்கன் விமான சேவையினால் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நேரடி விமான சேவைகள் இன்று (01) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ரஷ்யாவின் மெஸ்கோவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த UL 534 என்ற விமானம் இன்று காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் 51 பேர் குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் தொடர்ந்து விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.