இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் விபரம்!

Date:

நாட்டில் இதுவரை 12,290,482 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது .

அதேபோல், 6,873,138 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.நேற்றைய தினத்தில் (28) மாத்திரம் 14,207 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 131,544 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, இதுவரை 883,019 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 159,088 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் 23,797 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேபோல், இதுவரை 306,373 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 182,555 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 771,464 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 620,285 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...