இந்தியாவை விட பயங்கரமான நிலையில் இலங்கை-நாமலின் 10000 கட்டில்கள் எங்கே? விமலின் ICU கட்டில்கள் எங்கே? -இம்ரான் எம்.பி கேள்வி! 

Date:

கொரோனா தாக்கத்தில் இந்தியாவைவிட பயங்கரமான நிலையில் இலங்கை காணப்படுவதாகவும் நாமல் ராஜபக்ச கூறிய 10000 கட்டில்கள் எங்கே, விமல் வீரவம்ச கூறிய அதிதீவிர சிகிச்சை கட்டில்கள் எங்கே? என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.

கடந்த செவ்வாய்கிழமை(10) கிண்ணியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 

கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் தாக்கம் இன்று இலங்கையில் உச்சம் தொட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் காணப்பட்டதை விட பயங்கரமான நிலையில் இலங்கை உள்ளது.

 

வைத்தியசாலைகளில் இடமில்லை தீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை நோயாளிகள் வைத்தியசாலை வளாகத்தில் தரையில் ஓட்ஸிசன் சிலிண்டருடன் உறங்கும் புகைப்படங்கள் தொடர்ச்சியாக காண கிடைக்கிறது

 

ஆனால் நாமல் ராஜபக்ச அண்மையில் 10000 கட்டில்களை கையளித்ததாக கூறினார் விமல் வீரவம்ச அதி தீவிர சிகிசிச்சை கட்டில்களை தயாரித்ததாக கூறினார்.நோயாளிகள் தரையில் உறங்கும் போது இவை எதனையும் காணவில்லை.

இறப்புக்களின் எண்ணிக்கை நாளாந்தம் நூற்றை தாண்ண்டுகிறது ஆனால் அரசால் கூறப்படும் இறப்புக்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாக இருக்கலாம் என் கூறப்படுகிறது.ஜனாதிபதிக்கு கூட பிழையான எண்ணிக்கை வழங்கும்போது இது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்.

 

இன்று பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மூன்று வேளையும் உண்ட மக்கள் ஒரு வேளை கூட உண்ண முடியாமல் தவிக்கின்றனர்.பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு.பால்மா இல்லை.இப்போது சமையல் எரிவாயுவும் இல்லை.எரிவாயுவுக்காக மிக நீண்ட வரிசையில் சிலிண்டர்களுடன் பல மணி நேரம் வீதியில் காத்து கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...