இரவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான அறிவித்தல்

Date:

இரவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணிகளாக ஏறும் நபர்கள் குற்றவாளிகளாக இருக்கலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டியில் ஏறிய இருவரால் முச்சக்கரவண்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். முச்சக்கர வண்டியின் சாரதிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு கூறப்பட்ட பின், அந்த இடத்திற்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கடத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் நபர் ஒருவரையும் அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் 28 வயதுடைய நிட்டம்புவ, ருக்கஹவில பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...