இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை பேரூந்தின் சாரதி காப்பளர் மற்றும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் உள்ளிட்டோருக்கிடையில் கைகலப்பு

Date:

இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை பேரூந்தின் சாரதி காப்பளர் மற்றும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் உள்ளிட்டோருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
 
இன்று காலை 06.20 மணியளவில் கரடி போக்கு சந்தியில் ஏ9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது காயமடைந்ததாக தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை பேரூந்தின் சாரதி காப்பளர்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் .
சம்பவத்தின்போது பயணிகள் பேருந்துகளில் இருந்துள்ளனர். எனினும் அவர்களிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்த்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி நிருபர் – சப்த சங்கரி 

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...