ஊரடங்கு உத்தரவால் தினமும் 15 பில்லியன் ரூபாய் நட்டம்-நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்!

Date:

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது.எனவே நாடு முடக்கப்படுவதை தொடர்ந்தும் நீடிக்காது, முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

´இது போன்ற சூழ்நிலை ஏற்படும் போது, ​​நாட்டின் வளர்ச்சி வீதம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பன பாதிக்கப்படும். எனவே. நாட்டை மூடுவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க வேண்டுமாயின், நாம் நாட்டை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்´ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...