கண்டி உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Date:

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.மேலும், மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கண்டி நகர், பேராதனை உள்ளிட்ட பல பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...