கொரோனா ஆபத்தான நோயல்ல அது சாதாரண காய்ச்சல்!-எஸ்.பி.திசாநாயக்க!

Date:

கொரோனா என்பது ஆபத்தான நோய் அல்லவெனவும் அது சாதாரண காய்ச்சலே என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களில் 81 சதவீதமானவர்கள் எவ்விதமான சிரமங்களுமின்றி பூரண குணமடைவதாகவும், 14 சதவீதமானவர்கள் மட்டுமே காய்ச்சல், இருமல் போன்றவற்றால் சிறிது சிரமத்திற்கு உள்ளாகி பின்னர் குணமடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் கொரோனா மரணமானது இன்னும் 1.9 வீதமாகவே காணப்படுவதாகவும் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...