கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் 40 வீதமானோர் முஸ்லிம்கள் | நீதி அமைச்சர் அலி சப்ரி கவலை

Date:

இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தடுப்பூசி ஏற்றிக்கொள்வது பாதகமானது என்ற தவறான கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்பட்டிருக்கிறது. இதனால் முஸ்லிம்கள் பலர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள பின்வாங்குகின்றனர்.

இது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸ் தரப்பினர் என்னிடம் கவலை வெளியிட்டுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்டதே கொவிட் தடுப்பூசியாகும். இதில் எவ்விதமான பாதக விளைவுகளும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எனவே இது விடயத்தில் எவரும் எவ்வித சந்தேகமும் அச்சமும் கொள்ளத்தேவையில்லை. எனவே, உடனடியாக அனைத்து முஸ்லிம்களும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்று, தம்மையும் தமது குடும்பத்தினரையும் மரணத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.

ஏனெனில் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் மொத்த சனத்தொகையில் சுமார் 10 வீதமாக இருக்கின்ற நிலையில், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

Popular

More like this
Related

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...