கொழும்பின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடுமாறு மேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வர்த்தக நிலையங்களை சில நாட்களிற்கு மூடவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 96 வீதமானவர்கள் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கடைகளையும் மூடுவது என்ற வர்த்தக சங்கங்களின் முடிவை வரவேற்றுள்ள மேயர் அவர்கள் தங்கள் வருமானம் குறித்து சிந்திக்காமல் கொவிட்டினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
2020 ஜனவரிக்குள் கொரோனா வைரஸ் காரணமாக 30,000 பேர் உயிரிழக்கும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதை தீவிரமாக எடுக்கவேண்டும் என மேயர் தெரிவித்துள்ளார்.