கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியர் பத்மசாந்த உயிரிழப்பு!

Date:

கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

 

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மசாந்த கொவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியராவார்.

 

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய அன்னாரின் இறுதிக் கிரியைகள் கண்டி, மஹாய்யாவ மயானத்தில் இன்று (10)இடம்பெற்றுள்ளது.

 

இதேவேளை, கேகாலை பொது வைத்தியசாலையின் கர்ப்பிணி வார்டில் தாதியர் ஒருவர் உட்பட 4 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...