கொவிட் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் உடனடியாக விஷேட வைத்தியர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தற்போதைய கொவிட் நிலமை தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது கொவிட் நிலமை வேகமாக நாடு பூராக பரவி வருவதாகவும் நாளாந்த மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு முன்னெடுக்காமல் இராணுவத்தால் முன்னெடுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்