கொரோனா காரணமாக மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்ய எந்தவொரு தொகையையும் அறவிட வேண்டாம் என அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
உள்ளூராட்சி பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதில், சகல மயானங்களுக்கும் சடலங்களை தகனம் செய்வதற்கான எரிவாயுவை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.