சீனி களஞ்சியசாலைகள் உள்ள பகுதிகள் மற்றும் சந்தையில் சீனி தொடர்பான மதிப்பாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.நுகர்வோர் அதிகார சபையினால் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய. தமது அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சகல களஞ்சியசாலைகளிலும் உள்ள சீனி தொகை தொடர்பில் இதன் போது தரவுகள் சேகரிக்கப்படவுள்ளதாக குறித்த அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
சீனியினை பதுக்கி வைத்து அதனை அதிக விலைக்கு சந்தையில் விற்பனை செய்வதன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, கடந்த தினங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் ஊடாக 12,255 மெற்றிக் டன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்காக நாட்டின் சில பகுதிகளில் உள்ள மக்கள் சதொச விற்பனையகங்களின் முன்னர் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.