சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அஜித் ரோஹனவின் புகைப்படம் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்!

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவது போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் புகைப்படத்தில் இருப்பது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இல்லையெனவும், அது வேறு ஒருவரது புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இது TilTok செயலியில் இருந்து பெறப்பட்ட புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தற்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...