சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!

Date:

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக சுகாதார பிரிவினர் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகும் நிலைக் காணப்படுகிறது.

இதன் காரணமாக அவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்தது.

இரண்டாவது தடுப்பூசியை பெற்று 5 மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...