ஜனாதிபதி – ரணில் விக்கிரமசிங்க இன்று அவசர சந்திப்பு

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று ​நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தையின் இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ரணில், கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு , இன்று (17) இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...