டோக்கியோ ஒலிம்பிக்கின் தற்போதைய பதக்க பட்டியல் விபரம்!

Date:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி இன்று முடிவடைகிறது. 32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ஆம் திகதி தொடங்கியது.

 

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி சிறப்பாக நடந்து வருகிறது.205 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.

 

இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் நேற்றுடன் முடிந்து விட்டன. கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகிறது.

 

போட்டிகள் முடிந்ததும் நிறைவு விழா நடைபெறும். அதில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.

 

நிறைவு விழா அணிவகுப்பில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

 

போட்டி நிறைவு விழா முடிவில் அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024-ம் ஆண்டு) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படும்.

 

தற்போதைய நிலவரப்படி பதக்க பட்டியலில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் 27 தங்கம், 14 வௌ்ளி மற்றும் 17 வெங்கலம் என மொத்தம் 58 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...