தகனசாலை நெருக்கடியால் கொவிட் சரீரங்கள் தேங்கியுள்ளமை குறித்து ஆராய விசேட குழு!

Date:

நாட்டில் பதிவாகும் அதிகளவான கொவிட் மரணங்கள் காரணமாக தகனசாலைகளின் சேவைகளும் அதிகரித்துள்ளன.

அந்தவகையில், பேருவளை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் அளுத்கம உள்ளிட்ட தகனசாலைகளில் பகலில் மாத்திரமின்றி இரவு வேளைகளிலும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் கொவிட்19 தொற்றினால் மரணிப்போரின் சரீரங்கள் தேங்கியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

உதவி காவல்துறை அத்தியட்சகர் அடங்கிய விசேட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...