கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 55,842 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 787 வாகனங்களில் பயணித்த 1,437 பேர் பொலிஸ் வீதி தடைகளில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாட்டை மீறிய 191 வாகனங்களில் பயணித்த 471 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.