தொடரும் ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம்!

Date:

வேதன பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி 4 பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று (04) கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

நீர்கொழும்பு வீதியின் வெலிசரை, கண்டி வீதியின் கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில், ஹைலெவல் வீதியின்கொட்டாவை, காலி வீதியின் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகன பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன.

 

இன்று முற்பகல் குறித்த பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் புறப்பட்டு,பிற்பகல் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

 

கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும், அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

 

இந்நிலையில் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...