தொழிற்சங்க போராட்டத்தை அச்சுறுத்தல்களால் மலினப்படுத்த முடியாது -ஆசிரியர் சங்கம்!

Date:

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை அச்சுறுத்தல்களால்  மலினப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதவியவர்களை விசாரணை செய்வதையோ அல்லது கைது செய்வதையோ நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் யாழில் நேற்று (10) நடாத்திய ஊடக சந்திப்பின் போது சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது, இலங்கை ஆசிரியர் சங்கம் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்த வாகனப் பேரணி போராட்டத்தை குழப்புவதற்கு பொலிஸார் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.எனினும் இந்த தடைகளை தாண்டி எமது பேரணி திட்டமிட்டவாறு நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையைப் குழப்பும் பொலிஸாரினதுவும் அரசினதும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதனை அடுத்து பேரணிக்கு அழைத்து வந்த வாகனத்தையும் ஒலி ,ஒளிபரப்பு செய்த உரிமையாளர்களையும் பொலிஸார் விசாரணை செய்வதும் கைது செய்வதுமான பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை திசை திருப்பி குழப்புகின்ற பொலிஸாரின் நடவடிக்கைகளை முழுமையாக எதிர்க்கின்றோம். அத்தோடு பொலிஸாரின் இத்தகைய செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

போராட்டத்திற்கு உதவிய வாகனத்தின் சாரதியையும் ஒளிபரப்பு சேவை வழங்கியவர்களையும் கைது செய்வதையோ விசாரணை செய்வதையோ பொலிஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம் என்றார்.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...