நாடாளுமன்ற பணிக்குழாமைச் சேர்ந்த 275 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறு கொவிட் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதையடுத்து இன்று (17) முற்பகல் 9 மணிமுதல் 12 மணிவரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தநிலையில், நாடாளுமன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி காணொளிகளை கொண்டு தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அத்துடன், நாளைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை குறைந்தளவான பணிக்குழாமினரை கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.