இலங்கையில் 23,135 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதோடு, 1,021 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 153,678 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி இரண்டாவது தடவையும், 69,041 பேருக்கு முதலாவது தடவையும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 711 பேர் முதலாவது தடவையாக பைஷர் தடுப்பூசியை பெற்றுள்ளதோடு, 75 பேர் இரண்டாவது தடவையாக பெற்றுள்ளனர்.
இந்த தரவுகளின் அடிப்படையில் நாட்டில் இதுவரையில் 11 இலட்சத்து 27 ஆயிரத்து 8 பேர் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாலது தடவையாக பெற்றுள்ளனர். அவர்களில் 861,744 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 87 இலட்சத்து 94 ஆயிரத்து 593 பேருக்கு சைனோபாம் முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களில் 20 இலட்சத்து 61 ஆயிரத்து 775 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.