நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக நிதியத்தின் சேவைப் பிரிவின் பொதுமக்கள் தொடர்பு இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
அதன்படி அங்கத்துவ விண்ணப்பங்களை பாதுகாப்பு பிரிவுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான பெட்டியில் வைக்குமாறு அல்லது தபால் மூலம் அனுப்புமாறு சபையின் பொது முகாமையாளர் டிஜிஜி பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.