இந்த நாட்டிலே சிறுபான்மையினருக்கும் ,பெரும்பான்மையினருக்குமிடையிலான உறவை கட்டியெழுப்புவதிலும்,பலப்படுத்துவதிலும் எமது மனிதாபிமான பண்புகள் பிரதான பங்கை வகிக்கிறது.வரலாறு நெடுகிலும் இந்த நாட்டிலே இனங்களுக்கிடையிலான உறவை பலப்படுத்தியதோடு ,பாதுகாத்துள்ளது. அந்தவகையில் இவ்வாறான உறவை பலப்படுத்தி அதற்கான பாலம் அமைக்கின்ற நிகழ்வுகள் நாட்டில் ஆங்காங்கே நடந்து வருகின்றன.அந்தவகையில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடந்த ஒரு முன்மாதிரி மிக்க செயல் குறித்து கஹட்டோவிட்ட சகோதரர்கள் பகிர்ந்து கொண்ட உள்ளத்தை நெகிழ வைக்கின்ற ஒரு அழகான செயல் குறித்த செய்தியை Newsnow வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி எ.ஆர் அப்துல் ஹகீம் அவரது வகுப்பத்தோழர் மற்றும் அலுவலக நண்பரான ஸாஜித் உடன் தமது அலுவலகங்களை முடித்துக்கொண்டு கொழும்பில் இருந்து வேயன்கொடை ஊடாக வீடு திரும்பினார்கள். இவர்கள் புகையிரதத்தில் பயணிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
வழமை போன்று அன்று (28 )ஆம் திகதி வேயன்கொடையில் இருந்து உந்து உருளி(Bike) இல் வீடு திரும்பும் போது வேயன்கொடை பெட்ரோல் செட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள பாதையில் பணப்பொதி (Wallet) ஒன்றைக் கண்டுள்ளனர்.பின்னர் அதனை சற்று விரித்துப்பார்க்கும் போது அதில் இலட்சக்கணக்கான பணம் இருப்பதை அறிந்து கொண்டனர். செய்வதறியாததாக இதனை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பத்துடன் உரிமையாளரின் முகவரியை தேடியுள்ளனர் அதன்பின்னர் முகவரி நிட்டம்புவ பிரதேசம் என இணங்கன்டு கொண்டுள்ளனர். (இருக்கும் இடத்தில இருந்து 04 km). குறித்த முகவரியை நோக்கி பயணித்தை இருவரும் ஆரம்பிக்கும் வேளையில் பணப்பொதியை
( wallet )ஐ தொலைத்த சகோதரர் உட்பட அவரது குடும்பத்தினர் பதற்றத்தோடு தொலைத்த பணப்பையைத் தேடிக் கொண்டிருப்பதை அருகில் கண்டுள்ளனர்.பொதியை கண்டெடுத்த சகோதரர்கள் இருவரும் அவர்களிடம் நடந்த விடயத்தை கூறிவிட்டு பணப்பொதியை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர் . அப்போது உரிமையாளர் தரப்பு மிக்க மகிழ்ச்சியாக இருந்ததை அவதானித்ததாக இந்த இரு சகோதரர்களும் தெரிவித்தார்கள்.
சம்பவம் நடந்து இரண்டு கிழமைக்குப் பின்னர் அதாவது பெப்ரவரி 12 ஆம் திகதியளவில் ஊரில் வசிக்கின்ற இரு சகோதரர்கள் பெறுமதி வாய்ந்த பணப்பொதி ஒன்றைக் கண்டெடுத்து நிட்டம்புவ பிரதேசத்தின் அந்நிய சகோதரர் ஒருவருக்கு வழங்கி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது .
அந்த சகோதரர் (T.B Karunabandu – Loan Manager- HDFC Bank head office Colombo) குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பள்ளிவாசல் ஊடாக இந்த இரண்டு சகோதரர்களையும் தேடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னர் கடந்த சனிக்கிழமை (15/08/21) அந்த சகோதரர் நாட்டில் பிரபல தேர்களில் ஒருவரான மல்வத்த பனசலையின் நாயக்க தேரரையும் அழைத்துக்கொண்டு பணப்பொதியை கையளித்த இரு சகோதரர்களில் ஒருவரின் வீட்டுக்கு வந்துள்ளார்.இவ்வாறு
வந்தவர்கள் சிறிய ஒரு அன்பளிப்பு பொருள்களையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்லின சமூகத்தை கொண்ட இலங்கையில் கடந்த காலங்களாக பல்வேறு இனப்பிரச்சினைகள் இடம்பெற்று அழிவுகளோடு இனங்களுக்கிடையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.எனினும் இவ்வாறான மனதை நெகிழ வைக்கும் சம்பவங்கள் மூலம் இன்னும் இலங்கையில் மனிதாபிமானம் இனங்களுக்கிடையில் இருக்கின்றதை தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
கட்டுரையாளர் ரையான் ஈஸாவுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்