பாடசாலை சீருடைத் துணிக்காக உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுகோரல்!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணிக் கொள்வனவுக்காக உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.இதற்கமைய, உற்பத்தியாளர்கள் 5 பேர் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, உடன்பாடு தெரிவிக்கப்பட்ட விலைக்கு பாடசாலை சீருடைத்துணிகளை, குறித்த விபரக் குறிப்புக்களுக்கமைய உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களை குறித்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், அவற்றைப் பிரித்து, பொதியிட்டு கோட்டக் கல்வி வலயங்களுக்கு விநியோகிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...