புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிக வாய்ப்பு-லேடி ரிட்ஜ்வே விசேட வைத்தியர்!

Date:

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிக வாய்ப்புள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார்.

மேலும், சிகரெட், சுருட்டு அல்லது வேறு வேறு வகையில் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு பலவீனம் அடைவதாகவும் விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார்.இவ்வாறானவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதனால், மிக விரைவாக கொவிட் நிமோனியா நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புகைப்பிடிப்பவர்களுக்கு அருகாமையில் இருக்கும் குழந்தைகளின் நுரையீரலிலும் சிகரெட் புகையானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவ்வாறான குழந்தைகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டால் உடலில் கடுமையான நோய்கள் ஏற்பட்டு மரணம் கூட ஏற்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...