மோட்டார் வாகனத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Date:

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் நாராஹேனபிட்டி மற்றும் வேரகல அலுவலகங்களின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

திணைக்கள பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணமாகும். தொலைபேசியின் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சி கே அலஹகோன் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை பதிவு செய்தல் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 0707 677 877 என்ற தொலைபேசியின் ஊடாகவும், சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக 0707 677 977 என்ற தொலைபேசியின் ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும்.

இதேவேளை, தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. காலாவதியாகும் வருமானவரிப் பத்திரத்திற்காக அவற்றை புதுப்பிக்கும் போது அதற்கான தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...