பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை அவருடைய வழக்கு நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (10) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.