பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் “என் சாவுக்கு காரணம்” என ஆங்கில எழுத்துக்களினால் எழுதப்பட்ட வசனம் காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு எழுதப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், இந்த வசனம் சிறுமி எழுதியதா? இல்லை, சிறுமிக்கு தீ காயங்கள் ஏற்பட்டதன் பின்னர், விசாரணைகயை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு வேறு எவரேனும் எழுதியதா? என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த எழுத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, அரச பகுப்பாய்வு அதிகாரிகள், நேற்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வுகளை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.