ஹெய்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் 1800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தை அடுத்து, ஹெய்டியில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்குண்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.